இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை – இந்தியாவின் கெயில் இவர்தானா ?

rohith 1
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் ரோகித்சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

rohith 1

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இன்று நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குவது உறுதியாகி உள்ளது. மேலும் இனிவரும் போட்டிகளில் மும்பை அணி ஜெயித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதனால் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார். அந்த சாதனையை ஏனெனில் இன்றைய போட்டியில் 3 சிக்சர்களை அவர் விலாசும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும், உலக அளவில் 400 சிக்சர்களை அடித்த 8 ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.

rohith

இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1042 சிக்ஸர்களை விளாசி கெயில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பொல்லார்டு 756 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 509 சிக்சர்களுடன் ரசல் மூன்றாவது இடத்திலும், மெக்கல்லம் 485 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும், வாட்சன் 467 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

rohith 1

டிவில்லியர்ஸ் 430 ஆறாவது இடத்தில், ஆரோன் பின்ச் 399 ஏழாவது இடத்தில் இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தற்போது இன்றைய போட்டியில் மேலும் 3 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மா 400 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அவரை தொடர்ந்து இந்திய வீரர்களின் சார்பாக ரெய்னா 324 சிக்சர்களையும், கோலி 315 சிக்சர்களையும், தோனி 303 சிக்சர்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிச்சயம் இந்த போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை கடப்பார் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத் தக்கது.

Advertisement