போஸ் நல்லாயிருக்கு. பேட்டிங் தான் சரியில்லை. சகவீரரை நேரடியாக விமர்சித்த – ரோஹித்

Rohith-5

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Ind

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் வாய்ப்பு மறுக்கப்பட்ட கேதர் ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் இடம்பிடித்துள்ள கேதர் ஜாதவ் தற்போது இந்த தொடரில் சாதிக்க வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்த போட்டோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் நான் செய்ய விரும்பும் விஷயத்திற்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா அதற்கு கிண்டலாக கமெண்ட் பதிவு செய்துள்ளார். அதன்படி ரோஹித் குறிப்பிட்டதாவது : போட்டோ எல்லாம் நல்லாத்தான் இருக்கு. போஸை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்து என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Kedar-Jadhav

ரோகித் சர்மாவின் இந்த நக்கலான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்ற ஜாதவ் சிறப்பாக விளையாடுவதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் வயது மூத்த வீரரான ஜாதவை எதற்கு இன்னும் அணியில் வைத்திருக்கிறீர்கள் என்பது போலவும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் ஜாதவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -