எங்கள் திட்டம் குறித்து கூறமுடியாது. ஆனால் நிச்சயம் மாற்றம் இருக்கும் – ரோஹித் அதிரடி

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ban 2

- Advertisement -

தொடரில் வெற்றிபெற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் இந்த போட்டியை இழந்தால் இந்திய அணி தொடரை இழக்கக்கூடும். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் பவுலிங்கில் தான் அனுபவமின்மை தெரிகிறது. அதனால் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக நாங்கள் ராஜ்கோட் பிட்சை ஆராயவேண்டும். மைதானத்தின் தன்மையை பொறுத்தே இன்றைய போட்டியில் அணித் தேர்வு இருக்கும் என்றும் ரோஹித் தெரிவித்தார்.

Ind-2

டெல்லி பிட்ச் பவுலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை ஆனால் ராஜ்கோட் மைதானம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணியின் திட்டம் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் ஆனால் நிச்சயமாக அணி வீரர்களில் மாற்றம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதனால் புதிய வீரர்களை இன்று போட்டியில் எதிர்பார்க்கலாம்.

Advertisement