வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரின் சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – ரோஹித் பெருமிதம்

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை பங்களாதேஷ் அணி தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 174 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஐயர் 62 ரன்களும் லோகேஷ் ராகுல் 52 ரன்களும் அடித்து அணியின் ரன் குவிப்பு உதவினர்.

Iyer

- Advertisement -

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் பவுலர்களால் நாங்கள் வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். ஏனெனில் மிடில் ஓவர்களை வீசும் பொழுது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதனையும் கையில் எடுத்துக்கொண்டு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஒரு கட்டத்தில் ஆட்டம் வங்கதேச அணிக்கு சென்றாலும் மீண்டும் நமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி போட்டியை நம் பக்கம் திருப்பினர்.

Deepak-Chahar

மேலும் இந்த போட்டியில் ராகுல் மற்றும் ஐயர் விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது. முன்வரிசை வீரர்கள் விக்கெட்டுகளை இழக்கும்போது இதுபோன்று இளம் வீரர்கள் ஆட்டத்தை கையில் எடுப்பது அணிக்கு தேவையான ஒரு விடயம். அதை இவர்கள் இருவரும் சிறப்பாக செய்தனர். உலக கோப்பைக்கு முன் அணியில் சில மாற்றங்களை செய்து சரியான அணியுடன் ஆஸ்திரேலியா செல்வோம் என்றும் இதேபோன்று எப்போதுமே நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம் என்றும் ரோஹித் கூறினார்

Advertisement