எதிர்புறத்தில் நின்று இவரின் ஆட்டத்தை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இளம் வீரரை பாராட்டிய – ரோஹித்

Rohith-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

rahul 3

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த வெற்றி எங்களுக்கு தேவையான ஒன்றாகும். இந்த போட்டியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு வெற்றியை பெற நினைத்தோம். துவக்க வீரர்களாக எங்களது பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. ராகுல் சிறப்பாக ஆடியதால் என்னால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு எனது ஆட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது.

Rahul

உண்மையில் ராகுல் மிக திறமையான வீரர் தான் அவரின் எதிர்புறத்தில் இருந்து அவரது பேட்டிங்கை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அவர் நல்ல தன்னம்பிக்கையோடு வளர்ந்து வருகிறார். புதிய பாட்னருடன் களத்தில் ஓடும் பொழுது வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதனை நாங்கள் விரைவில் நீக்குவோம்.

- Advertisement -

Ind

நான் நிறைய முறை கூறிவிட்டேன் 100 ரன்களை கடந்து விட்டால் எவ்வளவு தூரம் பேட்டிங் செய்ய முடியுமோ அவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளுக்கு மேல் ஆடிவிட்டேன் என்னுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்கு தெரியும். எனவேஇந்திய அணிக்காக நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.