அவர் இருக்கும்வரை அந்த அணி பலமானது தான் – வெஸ்ட் இண்டீஸ் வீரரை புகழ்ந்த ரோஹித்

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.

wi 1

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா கூறியதாவது : வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போதும் ஒரு கணிக்கமுடியாத அணியாகவே திகழ்கிறது. ஏனெனில் அந்த வீரர்கள் எப்போது எப்படி செயல்படுவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் முதல் டி20 போட்டியில் கூட கோலியின் சிறப்பாக ஆட்டத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கிறது. பொல்லார்ட் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் அதுவும் அவர் கேப்டனாக மாறிய பிறகு அந்த அணிக்கு வேறு நிலையில் தன்னம்பிக்கை கொடுத்துள்ளது.

Pollard

ஐபிஎல் போட்டிகளில் அவருடன் நான் விளையாடியதால் எனக்கு அவரைப் பற்றி தெரியும் மேலும் அவர் ஒரு அணி வீரராக எப்படி சிந்திப்பார், கேப்டனாக மாறினால் எவ்வாறு சிந்திப்பார் போன்ற பல விடயங்கள் எனக்கு தெரியும். சர்வதேச அளவில் பல டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு டி20 போட்டிகள் குறித்த நுட்பம் மிக அதிகம்.

kohli 3

அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பெற்றுள்ள நுட்பமே அவரை எந்த நிலையிலும் போட்டியை மாற்றி வெற்றிக்கு கொண்டு செல்லும் திறமை உடையவராக வைத்துள்ளது. அதனால்தான் போட்டியின் தன்மையை மாற்றும் தகுதி அவரிடம் உள்ளது. இருப்பினும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது தொடரை வெல்லும் என்றும் ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement