பண்டின் தொடர்ச்சியான சொதப்பல்களுக்கு இதுவே காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து கிரிக்கெட் குறித்த பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Pant 2

அதில் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி யோசித்து நீண்ட காலம் ஆகிவிட்டது மேலும் விமர்சனங்கள் அறிவுரைகள் ஆகியவை இருக்கவே செய்யும் அதை நாம் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் குறித்து அவர் பேசுகையில் : அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. எனவே அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அதில் முழுமையான கவனம் செலுத்தி விளையாட வேண்டும்.

பிறர் கூறுவதை நாம் பொருட்படுத்த கூடாது. கிரிக்கெட் விளையாட்டாக இருந்தாலும் சரி எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி நம்மை சுற்றி நிறைய சத்தங்கள் இருக்கும் நமது கவனத்தை சிதறடிக்க அது வாய்ப்பாக இருக்கும். ஆனால் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன்படியே நடந்து கொள்ள வேண்டும். 21 வயதில் அவருக்கு எத்தனை அழுத்தம்.

Pant 1

அவர் இறங்கும் போதெல்லாம் சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இதைச் செய் அதைச் செய் என்று ஏராளமான அறிவுரைகள் அதனால் அவர்கள் ஆட்டம் சற்று தெளிவில்லாமல் இருக்கிறது. அதனால்தான் நான் அவரிடம் ஒரு விஷயத்தை சொன்னேன். உன்னை சுற்றி ஒரு வட்டத்தை அமைத்துக்கொள் அதனுள் யாரையும் அனுமதிக்காதே. இதுதான் உனக்கு பாதுகாப்பு மக்கள் உன்னை பற்றி பேசுவார்கள்.

- Advertisement -

Pant-4

வெளியே நடப்பது எதுவாக இருந்தாலும் அந்த வட்டத்திற்குள் உன் வேலையை நீ முழு கவனம் செலுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் உன்னுடைய திறமை அதிகரிக்கும் என்று கூறினேன் இந்த விடயங்கள் அவரின் வளர்ச்சிக்கு உதவினாலும் உதவலாம். என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.