அவருக்கு சரின்னு பட்டா எனக்கும் ஓகேதான். விராட் கோலியின் விருப்பத்திற்கு ஓகே சொன்ன ரோஹித் – விவரம் இதோ

Rohith-1

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒரு கட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தலா இரு போட்டிகளில் வென்று கடைசி போட்டி இவ்விரு அணிகளுக்கும் டிசைடர் போட்டியாக அமைந்தது. 5வது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓபனிங் ஆட வந்தனர். கேஎல் ராகுலை வெளியே உட்கார வைத்துவிட்டு விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் ஆட வந்தார்.

rohith

எல்லோர் மத்தியிலும் எழுந்த கேள்விகள் தவிடு பொடியாக்கும் வகையில் 9 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து அசத்தியது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜோடி. ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆரம்பித்த விராட் கோலி 80 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை 200க்கும் மேல் போக வழி வகுத்தார். ஒருவகையில் இந்திய அணி கடைசி போட்டியில் வெல்ல இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தான் காரணம்.

இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய விராட் கோலி ரோகித் சர்மா உடன் இணைந்து ஓப்பனிங் ஆடுவதில் எனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார்.மேலும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பனிங்க ஆட உள்ளேன் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

rohith

இந்நிலையில் செய்தியாளர்கள் இடத்தில் பேசிய ரோகித் சர்மா, அணியில் எந்த இடத்தில் யார் இறங்க வேண்டும் என்பதை கேப்டன் தான் தீர்மானிப்பார். அவர் எடுக்கும் முடிவுகள் அணிக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் எந்தவிதமான முடிவுகளை வேண்டுமானாலும் அவர் எடுக்கலாம் அதில் தப்பில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

kohli 1

நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் அவர் ஓப்பனிங் என்னோடு இணைந்து ஆட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை. அணிக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நான் அவருடன் இணைந்து ஓப்பனிங் ஆடுவேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.