அவங்க எடத்துல விளையாடுறது அவ்ளோ ஈஸியா இருக்காது – வெளிப்படையாக பேசிய ரோஹித்

Rohith-1
- Advertisement -

இந்திய அணி ஜனவரி 24 ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Rohith

இந்த தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இந்த தொடர் குறித்து துவக்க வீரரான ரோகித் சர்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடர் எளிதான தொடராக இருக்காது. ஏனெனில் கிரிக்கெட் விளையாடுவதற்கு நியூசிலாந்து மைதானங்கள் கடும் சவால் கொடுக்கும். சென்ற முறை அங்கு விளையாடியபோது 0-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை நாம் இழந்தோம். ஆனால் முன்பை விட இப்போது நம் பந்துவீச்சில் அதிக பலம் உள்ளது. இதனால் இம்முறை அங்கு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நியூசிலாந்தின் சீதோஷண நிலையும், புதிய பந்தை எதிர்கொள்வதும் சுலபமான காரியம் கிடையாது.

Rohith

அங்கு விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும் நியூசிலாந்து மண்ணின் சூழலை சாதகமாக்கி எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கடந்த வருடம் நிறைய ரன்கள் அடித்தது குறித்து என்னிடம் கேட்கிறார்கள். நான் தனிப்பட்ட சாதனைகளுக்கு எப்போதும் முன்னுரிமை தருவது கிடையாது. ஒரு அணியாக தொடரை கைப்பற்றுவது தான் முக்கியம்.

Rohith-1

நாம் நன்றாக விளையாடினால் சாதனைகள் தானாக வந்து சேரும் என்றும் முன்பை விட இப்போது எனது ஆட்டத்திறன் மாறியுள்ளது. இப்போது நன்கு புரிந்து கொண்டு விளையாடுகிறேன் என்றும் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement