3 வடிவ கிரிக்கெட்டிலும் அசத்திட்டாரு. இதுவே இந்திய அணிக்கு தேவை – தமிழக வீரரை பாராட்டிய ரோஹித்

Rohith
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது. இதன் பின் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.

Thakur

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 15 தேதி முதல் காபா மைதானத்தில் தொடங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும். இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிஸ்சில் 336 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிஸ்சில் 294 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி 1.5 ஓவர்கள் எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டும் குவித்து விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

nattu 2

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக விளையாடியுள்ளார். இதன் காரணமாக நடராஜனை விராட் கோலி உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ரோகித் சர்மாவும் நடராஜனை பாராட்டி பேசியுள்ளார். நடராஜன் குறித்து பேசிய ரோகித் சர்மா :

Nattu

” இவர் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நாங்கள் நடராஜனிடம் எதிர்பார்த்ததை அவர் சிறப்பாக செய்தார். இது தான் அணிக்கு தேவைப்படுகிறது. இவர் ஜபிஎல் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று தற்போது சர்வேதச அளவில் விளையாடி வாருகிறார். இவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இவர் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக திகழ்கிறார்” என்று ரோகித் பாராட்டியுள்ளார்.

Advertisement