- Advertisement -
ஐ.பி.எல்

இவரோட பேச்சை நாங்க கேக்குறதாலதான் இன்னைக்கு மும்பை ஜாம்பவான் அணியாக திகழ்கிறது – ரோஹித் புகழாரம்

மும்பை இந்தியன்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறது. தற்போது வரை 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2010ஆம் ஆண்டு வரை அந்த அணி பெரிதாக சாதிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவை கேப்டன் ஆகிய பின்னர்தான் களத்தில் சாதிக்க ஆரம்பித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணி படு மோசமாக தொடர்ச்சியாக பல போட்டிகளில் தோற்றிருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இது எவ்வாறு சாத்தியம் என்று ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ரோகித் சர்மா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:

- Advertisement -

அந்த காலகட்டம் மிகவும் கடினமாக இருந்தது. கடினமான நேரத்தை தாண்டி வந்தோம். துபாயில் 5 போட்டிகளில் பங்கேறறோம். அங்கு நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைதோம். ஆனால் எங்களிடம் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருந்தார். பயிற்சியாளர் பாண்டிங் எப்போதும் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவ்வப்போது இளம் வீரர்களை ஊக்குவித்து கொண்டே இருப்பார்.

பெரிய வீரர்கள் பற்றி கவலைப்பட மாட்டார். இளம் வீரர்கள் மீது அவரது கவனம் எப்போதும் இருக்கும் . துபாயில் இருந்து இந்தியா திரும்பியதும், எல்லாம் மாறியது ரிக்கி பாண்டிங் பேச்சு எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதன் காரணமாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றோம் என்று கூறினார் ரோகித் சர்மா.

- Advertisement -

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை சந்தித்தது . அதன் பின்னர் இதே தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக மாறியதாகவும் ரோஹித் குறிப்பிட்டார்.

மேலும் சச்சின் மும்பை அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அவரது ரசிகர்கள் சச்சினை அந்த இடத்தில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை மட்டுமில்லாது ரோஹித்தையும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by