விக்கெட்டை விட்டதால் இதை மட்டும் பண்ணமாட்டேன்னு நெனைக்காதீங்க – ரோஹித் அதிரடி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் லாபுஷேன் அடித்த அபாரமான சதம் மூலம் 369 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 336 ரன்களை குவித்தது.

gill 2

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஆஸ்திரேலிய தரப்பிற்கு எதிராக அபாரமாக விளையாடி 43 ரன்களை கடந்தபோது அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுழற்பந்து வீச்சாளரான லயன் வீசிய பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்டு ரோகித் 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 74 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்தார். நிதானமாக விளையாடி அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததால் இந்த விக்கெட் குறித்து தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

rohith

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ரோகித் பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் சரியாகத்தான் பந்தை அடிக்க முயற்சி செய்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை, இதற்காக நான் வருந்த மாட்டேன். என்னுடைய அதிரடி இனியும் தொடரும். அதிரடி என்பது என்னுடைய ஸ்டெயில். பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே எனது பணி.

- Advertisement -

நான் விளையாடவில்லை என்றாலும் யாராவது ஒருவர் இதை செய்துதான் ஆகவேண்டும். அதனால்தான் நான் அதிரடியை கடைப்பிடித்து வருகிறேன். சில நேரங்களில் இதில் தவறு ஏற்படலாம். அதனால் பெரிய வருத்தம் எதுவும் எனக்கு இல்லை. நாதன் லயன் சிறந்த பந்துவீச்சாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே எனது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அவர் என்னை வீழ்த்தி விட்டார்.

rohith 1

நான் விளையாடிய ஷார்ட் எப்போதும் விளையாடக் கூடிய ஒன்றுதான். கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி உள்ளேன். சில சமயம் பந்து பவுண்டரி செல்லும் சில சமயம் நேராக பீல்டர்களின் கைகளுக்கு செல்லும். தற்போது நான் அவுட் ஆனதால் என்னுடைய அதிரடியை நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து அதிரடியாக மட்டுமே விளையாடுவேன் விமர்சனங்களைக் கண்டு கொள்ளப் போவதில்லை என்று ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement