கோலியிடம் இதை சொல்லிட்டு தான் ரிஸ்க் எடுத்தேன். கடைசில ஜெயிச்சாச்சு – ரோஹித் மகிழ்ச்சி

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ind vs Aus

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும், தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : இது எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி. தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ராகுல் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்த பாட்னர்ஷிப் அணிக்கு மிகவும் முக்கியம் நாங்கள் பேசிக் கொண்டோம்.

Rohith-2

மேலும் எங்கள் இருவரில் ஒருவர் கடைசிவரை நின்று ஆட வேண்டும் என்று நினைத்தோம் அதேபோன்று நாங்கள் சிறப்பாக விளையாடினோம் என்றே நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக 100 ரன்களை பார்ட்னர்ஷிப் செய்து கடந்த பிறகு என்னால் பந்தினை சரியாக பார்க்க முடிந்தது மேலும் பந்து பேட்டில் நன்றாக பட்டது. எனவே நான் கோலியிடம் என்னுடைய ஷாட்களை ஆடப் போகிறேன் என்று கூறிவிட்டு ரிஸ்க் எடுத்தேன் அது இன்று சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. ஒருவேளை நாங்கள் துவக்கத்திலேயே விக்கெட் இழந்து இருந்தால் போட்டி மாறி இருக்கும்.

Rohith

ஆஸ்திரேலியா எப்பவுமே சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டது. இன்றும் அவர்களது 3 வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நான் கடைசிவரை நின்று ஆட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் 35 ஆவது ஓவர்வரை தான் என்னால் ஆட முடிந்தது. கடந்த இரண்டு போட்டிகளை மாதிரி இல்லாமல் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன் அதுவும் சிறப்பாக அமைந்தது என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement