எனக்கு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பளித்த இந்த இரண்டு நபர்களுக்கு எனது நன்றி – உருக்கமாக பேசிய ரோஹித்

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Rohith

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் நான் களம் இறங்கும் பொழுது என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த வாய்ப்பு எனக்கு மிகச்சிறந்த ஒன்று இந்த வாய்ப்பினை எனக்காக கொடுத்த பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருநாள் போட்டி டெஸ்ட் போட்டி என்று நான் பார்ப்பதில்லை. என்னால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

Rohith 1

அதனை கருத்தில் கொண்டே இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டேன் மேலும் சூழ்நிலையைப் பொறுத்து பேட்டிங் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்றாகும். என்னுடைய இந்த துவக்க வீரர் இடத்தை நான் விரும்பி விளையாடுகிறேன். மேலும் எனக்கு ஆட தோன்றும் ஷாட்டுகளை சுதந்திரமாக ஆடுகிறேன். இதுவும் எனக்கு நல்ல சிறப்பான ஆட்டத்தை வழங்க உதவுகிறது என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement