பி.சி.சி.ஐ கிட்ட நான் தெளிவா சொல்லிட்டேன். ஆனா என்னோட விஷயத்துல என்ன நடக்குதுன்னு தெரியல – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் “ஹிட்மேன்” என்று ரசிகர்களால் புகழப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு தனது சிறப்பான சேவையை அளித்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போது இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்தார்.

Rohith

- Advertisement -

இதனால் அவர் சில போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இதனால் ஐபிஎல் தொடர் முடிந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி தேர்வின் போது அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. மேலும் இந்த விடயம் அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இருப்பினும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிகளில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா களம் இறங்கி விளையாடி தனது உடல்தகுதியை நிரூபித்தார்.

மேலும் ரோஹித்தை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனை அடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் ரோஹித் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் ஆஸ்திரேலியா செல்லாமல் அங்கிருந்து இந்தியா திரும்பி தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது உடற் தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.

rohith 1

இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து பேசிய ரோகித் கூறியதாவது : என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் நான் சொல்லி ஆகவேண்டும். எனது காயம் குறித்த முழு தகவலையும் நான் பி.சி.சி.ஐ-க்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தெளிவாக சொல்லி இருந்தேன். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எனக்குள் நம்பிக்கை இருந்ததால் சில நாட்களில் காயம் சரியானதும் விளையாடத் தொடங்கினேன்.

rohith 1

இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமி வந்திருப்பது லாங்கர் பார்மெட்டில் நான் தொடர்ந்து விளையாடவும், நான் பிட்டாக இருக்கிறேன் என்பதையும் நிரூபிக்க தான் என்று ரோகித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியுடன் கோலி இந்தியா திரும்புவதால் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் ரோஹித்தை கேப்டனாக செயல்படுவார் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement