5 நிமிஷம் லேட் ஆய்டிச்சி. நேற்று மட்டும் இது நடக்காம இருந்தா நான் சூப்பர் ஓவரில் விளையாடி இருக்கமாட்டேன் – ரோஹித் ஓபன் டாக்

Rohith-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் 179 ரன்களை அடிக்க ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைக்க இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Rohith-3

- Advertisement -

இந்தப் போட்டிக்குப் பின்னர் சூப்பர் ஓவர் குறித்தும் த்ரில் வெற்றி குறித்தும் பேட்டியளித்த ரோகித் சர்மா கூறியதாவது : முதலில் பேட்டி முடிந்ததும் எனது பொருட்களை எல்லாம் எடுத்து பையில் வைத்து பேக் செய்து விட்டேன். கடைசியில் சூப்பர் ஓவர் விளையாட வேண்டி வந்தது. எனவே வேக வேகமாக சென்று எனது பொருட்களை எல்லாம் பையிலிருந்து எடுத்தேன். அப்போது அப்டோமன் கார்ட் காணவில்லை. அதனை தேடி எடுக்கவே சுமார் 5 நிமிடங்கள் எனக்கு ஆனது.

சூப்பர் ஓவர் வரை போட்டி செல்லும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவதைப் பார்த்த போது அவர்கள் எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள் என்று நினைத்தேன். சூப்பர் ஓவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பும்ராவிற்கு பந்து வீசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர் டி20 போட்டிகளில் அருமையாக பந்துவீச கூடியவர். எனவே அவர் வழக்கம்போல ஈஸியாக பந்துவீசி விடுவார் என்று நினைத்தேன்.

Rohith-2

ஆனால் பேட்டிங் அப்படி இல்லை அந்த குறிப்பிட்ட நாளில் நான் நல்ல டச்சில் இருந்தால் மட்டுமே நான் பேட்டிங் இறங்க முடியும். அந்த வகையில் நான் இன்றைய போட்டியில் 60 ரன்களுக்கு மேல் குவித்ததால் நான் இறங்கினேன். நான் சரியாக ஆடியிருக்கவில்லை என்றால் எனக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரோ அல்லது வேறு யாராவது அந்த இடத்தில் இறங்கி இருப்பார்கள் என்று ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement