என்னை சேவாக் உடன் ஒப்பிடுவதா ? அவர் வேறலெவல் – ரோஹித் ஓபன் டாக்

Sehwag-1

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த தென் ஆப்ரிக்க தொடரில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக விளையாடத் தொடங்கினார்.

Rohith

துவக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் விளாசி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரோகித் சர்மாவை சிலர் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். இந்நிலையில் தற்போது சேவாக் உடனான ஒப்பீடு குறித்து ரோகித் சர்மா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நானும் சேவாக்கும் ஒரே மாதிரியாக விளையாடியதாக மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் நான் வேறு சேவாக் வேறு, சேவாக் என்றுமே சேவாக் தான் அவரை போல ஒருவர் விளையாடுவது மிகக் கடினம். நான் என்ன நினைக்கிறேனோ அதை நான் செய்கிறேன் ஆனால் சேவாக் ஒரு லெஜண்ட் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு பிடிக்கும் இந்திய அணியும் அவரிடம் இருந்து அப்படி ஒரு ஆட்டத்தை தான் எதிர்பார்த்தது.

Sehwag

அவரைப் போன்று நான் அதிரடியாக விளையாடி வருவதால் இந்திய அணியும் என்னையும் அவ்வாறு அதிரடியாக விளையாட விரும்புகிறது. மேலும் என்னுடைய பாணியில் நான் தொடர்ந்து விளையாடி வருவதால் சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -