களத்தில் இருந்து வெளியேறிய கோலி. கடைசி 4 ஓவர்கள் கேப்டன்சி செய்து வெற்றிபெற்ற ரோஹித் – நடந்தது என்ன ?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்களை குவித்தது.

sky 2

- Advertisement -

அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குதித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 17வது ஓவரில் கேப்டன் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கடைசியில் இருந்த நான்கு ஓவர்களிலும் ரோகித் சர்மா தான் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

விராட்கோலி வெளியேறிய போது இந்திய அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ரோஹித் தனது சாமர்த்தியமான கேப்டன்சி மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். ஆம் ஆட்டத்தின் போக்கை மாற்றிய 17 வரை வீச ஷர்துல் தாகூரை அவர் அழைத்தார். அவரும் அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு திருப்புமுனையை கொடுத்தார்.

Thakur

அதற்கு அடுத்து பவுலர்களை சரியான முறையில் ரொட்டேட் செய்த ரோகித் இறுதிவரை இங்கிலாந்து அணியை பிரஷரில் வைத்து வெற்றியும் பெற்றார். குறிப்பாக 20 ஆவது ஓவரின் போது தாகூரின் பந்தில் சிக்சர், பவுண்டரி என செல்ல தாகூர் பதட்டம் அடைந்தார். அதன் பின்னர் நேராக பவுலரிடம் சென்ற ஹர்டிக் பண்டியா மற்றும் ரோகித் ஆகியோர் சில அறிவுரைகளை கூறி அவரைத் தேற்ற மீண்டும் சிறப்பாக பந்து வீசிய தாகூர் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

thakur 1

இந்திய அணி சார்பாக தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கடைசி 4 ஓவர்களை கேப்டன்சி செய்த ரோகித் சர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறிய கோலியும் ஆட்டம் முடிந்ததும் ரோகித் சர்மாவுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement