இன்றைய முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் இவர்தான் – ரோஹித் அதிரடி

Pant

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணியும், முஹமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.

Ind

விராட் கோலி, தோனி, பும்ரா மற்றும் பாண்டியா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசு பிரச்சனை காரணமாக இந்த போட்டி தடைபடுமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படும் வீரர் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இன்றைய போட்டியில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடும் மேலும் காற்று மாசுபாடு என்பது ஒரு பிரச்சனை கிடையாது. ஏனெனில் ஏற்கனவே இதுபோன்ற ஒரு சூழலில் நாங்கள் டெஸ்ட் போட்டியை விளையாடி உள்ளோம். அதனால் இந்த போட்டியில் எந்த தடையும் எங்களுக்கு கிடையாது. மேலும் இந்த போட்டியில் பண்ட் விக்கெட் கீப்பராக தொடருவார். ஏனெனில் அவர் t20 பார்மட் மூலமாகத்தான் அவரது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார்.

pant 1

எனவே அவர்தான் நிச்சயம் என்னுடைய முதல் தேர்வாக இருப்பார். மேலும் சில போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினாலும் சிறப்பாக விளையாடி உள்ளார். எனவே அவரே விக்கெட் கீப்பராக தொடர்வார். இருப்பினும் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு அணியில் தேவைக்கு ஏற்ப வாய்ப்பும் வழங்கப்படும் என்று ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -