இவரை பற்றி இனி யாரும் எதுவும் பேசவேண்டாம். என் ஆதரவு இவருக்கு எப்போதும் உண்டு – அடித்து சொன்ன ரோஹித்

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடன் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

Chahal

நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடாத இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து ஏராளமான விமர்சனங்கள் ரசிகர்களிடையே செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியின் போது பந்தை ஸ்டம்பின் முன்பே பிடித்து அவர் ஸ்டம்பிங் செய்த விதம் மேலும் அவரின் மீது விமர்சனம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இது குறித்து தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : என்னுடைய ஆதரவு எப்போதும் பண்டுக்கு உண்டு. தினமும் பண்ட் குறித்த கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலாக நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான் அவரை விமர்சிக்காமல் அவரை தனிமையாக சுதந்திரமாக விளையாட விடுங்கள். அவர் ஒரு திறமை வாய்ந்த வீரர் நிச்சயம் அவர் சாதிப்பார்.

அவரை நீங்கள் உன்னிப்பாக கவனித்து அவரின் குறையை எடுத்துக் கூறுவதை நிறுத்தினால் தான் அவர் சிறப்பாக விளையாடுவார். மேலும் அவர் தனது திறமையை வெளிக் கொணர்ந்து அவரின் தனி அடையாளத்தை அளிக்க காத்திருக்கிறார். இந்த சமயத்தில் அவரை விமர்சிப்பது அவரின் ஆட்டத்தை பாதிக்கும். எனவே அவரை அவரது ஸ்டைலில் விளையாட விடுங்கள் நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைப்பார்.

- Advertisement -

pant 1

கீப்பிங்கில் சில சூழ்நிலைகளில் அவர் செய்யும் தவறை பார்க்காமல் அவர் கீப்பிங்கில் செய்யும் நல்ல செயல்களை பாராட்டுங்கள் என்று குறிப்பிட்டு பேசினார். இறுதிப் போட்டியிலும் பண்ட் விளையாடுவது தற்போது ரோஹித்தின் இந்த பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.