இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் அது சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஒரு விக்கெட் கொண்டாட்டத்தின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் தலையில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தொடர்களாகவே பேட்டிங்கில் அசத்தி வரும் பண்ட் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக கீப்பிங் செய்து வருகிறார்.
நம்ப முடியாத வகையில் சில ஸ்டம்பிங் மற்றும் கேட்ச்களையும் ரிஷப் பண்ட் பிடித்து அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி வரும் அவர் மீண்டும் தனது அசத்தலான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
Rohit to Pant in dressing room: pic.twitter.com/A4QsutZkDs
— Sourav Root (@s0urav27) February 15, 2021
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது அஸ்வின் வீசிய ஒரு பந்தில் ரிஷப் பண்ட் அபாரமாக கேட்ச் பிடித்து இங்கிலாந்து வீரரை வெளியேற்ற அந்த விக்கெட்டை அனைவரும் கொண்டாடினார்கள். அப்போது ரோகித் சர்மா விக்கெட்டை கொண்டாடும் போது அருகில் வந்த பண்டை தலையின் மீது செல்லமாக அடித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.