சதமடிக்கும் முன்னர் வானத்தை பார்த்து கத்திய ரோஹித் – மைக்கில் பதிவான ஆடியோ

Rohith-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் துவக்கத்தில் அகர்வால், புஜாரா மற்றும் கோலி என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

Ind

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா நேற்று மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி (117) சதம் அடித்தார். ரஹானே (83) தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று ரோகித் செய்த செயல் ஒன்று ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அதன்படி ரோஹித் 94 ரன்களில் இருந்த போது மைதானத்தில் வெளிச்சம் குறைந்தது. மேலும் மழை வருவதற்கான அறிகுறி அதிகமாகி இருந்தது அப்பொழுது ரோஹித் 94 ரன்களில் களத்தில் இருந்தார்.

Rohith 4

சதம் அடிக்க முடியுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரோகித் வானத்தை நோக்கி “நாட் நவ்” என்று கத்தினார். அப்படி என்றால் இப்போ வேண்டாம் என்பது அர்த்தம் அதாவது மழை வரும் வரும் சூழலில் மழை இப்போது வர வேண்டாம் நான் சதம் அடித்துக் கொள்கிறேன் என்பது போல ரோஹித் கத்தியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாக தற்போது இந்த விடயம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement