எந்த பிளானும் இல்ல. சூப்பர் ஓவரில் நான் ரெண்டு சிக்ஸர் அடிக்க இதுதான் காரணம் – ரோஹித் வெளிப்படை

Rohith-2
- Advertisement -

ஹமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு மிகவும் திரில்லான போட்டியாக அமைந்தது. முகமது ஷமி வீசிய இருபதாவது ஓவரில் போட்டி டையாக அடுத்து நியூசிலாந்து சூப்பர் ஓவரில் 17 ரன்கள் குவித்தது. 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது.

Rohith

இதனால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டதால் போட்டியில் பரபரப்பு உண்டானது. இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த அந்த சமயத்தில் ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்தபோட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : சர்வதேச அளவில் நான் சூப்பர் ஓவரில் முதல்முறையாக தற்போதுதான் விளையாடினேன். முதலிலிருந்தே அதிரடியாக விளையாடுவதா அல்லது ஒன்று இரண்டு ரன்களாக அடிக்கலாமா என்று குழப்பம் இருந்தது. ஆனால் இறுதியில் போட்டி நல்ல விதத்தில் முடிந்தது. சூப்பர் ஓவரில் நான் எந்தவொரு பிளானையும் யோசிக்கவில்லை.

பவுலர்கள் எதாவது தவறு செய்வார்கள் என்று காத்திருந்தேன். அதேபோன்று கடைசி இரு பந்தில் தவறு நடந்தது. எனக்கான வாய்ப்பு கிடைத்தது நான் சிக்ஸர் விளாசினேன். இறுதியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 ஆவது போட்டி நாளை 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement