சர்வதேச கிரிக்கெட்டில் யாராலும் முறியடிக்க முடியாத ரோஹித்தின் 5 சாதனைகள் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரர் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதன்பிறகு தனது கேரியரில் உச்சத்தை தொட ஆரம்பித்தார். அதாவது 2011-ம் ஆண்டுக்கு பிறகு ரோஹித்தை தொடக்க ஆட்டக்காரராக தோனி களமிறக்கினார்.

Rohith

- Advertisement -

அதன் பிறகு தனது அதிரடியை படிப்படியாக ஆரம்பித்த ரோகித் தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 224 போட்டிகளில் விளையாடி 9115 ரன்களை அடித்துள்ளார். அதில் 29 சதங்களும், 43 அரை சதங்களும் அடங்கும். மேலும் டி20 போட்டிகளிலும் 2773 ரன்களை குவித்துள்ளார். இதிலும் 4 சதங்கள் மற்றும் 21 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த பதிவில் ரோஹித் சர்மாவின் முறியடிக்க முடியாத சாதனைகளை 5 சாதனைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

சாதனை 1 : ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் – 264 ரன்கள்

- Advertisement -

சாதனை 2 : அதிகமுறை ஐ.பி.எல் கோப்பைகளை வென்ற அணியில் இருந்த வீரர் (5 முறை அதில் 4 முறை கெட்டானாக ஜெயித்துள்ளது குறிப்பிடத்தக்கது)

சாதனை 3 : ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் ( 2 இரட்டைச்சதம் இலங்கை அணிக்கு எதிராக, 1 ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்தது)

- Advertisement -

rohith

சாதனை 4 : உலககோப்பை தொடரின் ஒரே தொடரில் அதிக சதங்கள் ( 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்துள்ளார்)

சாதனை 5 : டி20 போட்டிகளில் இதுவரை 4 சதங்களை அடித்த ரோகித் இன்னும் நிறைய சதங்களை அடிக்க வாய்ப்பு உள்ளதால் அதுவும் யாராலும் அடிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

ரோஹித்தின் இந்த சாதனைகள் அனைத்தும் முறியடிக்க சற்று கடினமான சாதனைகள் ஆகும். மேலும் இன்னும் சில ஆண்டுகள் ரோஹித் விளையாட வாய்ப்புள்ளதால் இன்னும் பல சாதனைகளை அவர் படைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement