என் கிரிக்கெட் வாழ்வில் இந்த போட்டியில் விளையாடாததே மிகமோசமான தருணம் – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் மிகவும் தவிர்க்க முடியாத வீரர் ரோகித் சர்மா. மூன்றுவகையான போட்டியிலும் இந்திய அணிக்கு துவக்க வீரர் இவர்தான். கடந்த சில வருடங்களாக இந்திய அணி அதிக வெற்றிகள் பெற காரணமாக இருப்பவரும் இவர்தான். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று முறை ஒரே இரட்டை சதம் அடித்த வீரர் இவர்தான்.

Rohith-3

- Advertisement -

தற்போது வரை 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9115 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 49.27 ஆகும். 2013 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்திய அணியின் தொடக்க வீரராக ஆடிக் கொண்டிருக்கிறார். அதற்கு முன்பு வரை பல்வேறு இடங்களில் களமிறங்கி அவ்வப்போது சொதப்பி இந்திய அணியில் நிரந்தர இடம் விடாமல் தவித்தவர் ரோகித் சர்மா.

இந்நிலையில் தனது வாழ்க்கையில் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான தருணம் என ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது : கடந்த 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் இடம்பெறவில்லை .

rohith

சொந்த நாட்டில் உலக கோப்பை தொடர் நடக்கும்போது நாம் கண்டிப்பாக ஆடியே தீர வேண்டும். இந்தத் தொடரில் இடம் பிடிகாத்தது எனக்கு கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான தருணம்.
மேலும் என்னுடைய சொந்த மைதானமான வான்கடேயில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் விளையாட முடியாதது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது .

- Advertisement -

உலக கோப்பை தொடருக்கு முன்னர் சிறப்பாக ஆடவில்லை அதனால் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறினார் ரோகித் சர்மா. ஆனால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசி 648 ரன்கள் குவித்தார் ரோஹித் சர்மா.

rohith

அதே நேரத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா சற்று சொதப்பினார் இதன் காரணமாக இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது காயத்திலிருந்து மீண்டு ரோஹித் தற்போது முழு உடற்தகுதியுடன் விளையாட தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement