முறையான சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே அடிப்பது கிடையாது. இதில் தான் உள்ளது – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohith
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் போது ரோஹித் சர்மா காயமடைந்தார். இதன் காரணமாக அவரால் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை.

rohith 6

- Advertisement -

பின்னர் நாடு திரும்பிய ரோகித் சர்மா இந்தியாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் அதில் : எந்த வயதில் சிறுவர்களுக்கு கிரிக்கெட்டை விளையாட கற்றுக் கொடுக்கலாம் என்று கேட்கப்பட்டது ? அப்போது பதிலளித்த அவர் : எந்த ஒரு விளையாட்டையும் துவங்க வயது தடையில்லை.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி 30 வயதில் தான் தனது முதல் போட்டியில் ஆடினார் . அதன் பின்னர் 7 வருடம் கிரிக்கெட்டில் கோலோச்சினார். அவரை மிஸ்டர் கிரிக்கெட் என்று நாம் அழைக்கிறோம் . அவரிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விளையாட்டை துவங்கவும் வயது தடையில்லை என்பதே ஆகும்.

Rohith

கிரிக்கெட்டில் அதிக தூரம் சிக்சர் அடித்தால் 8 ரன்கள் கொடுக்கப்படுவதில்லை. கிறிஸ் கெய்ல் போன்று அசுரத்தனமாக அடிக்க தெரியாது, ஆனால் துல்லியமாக அடித்து பவுண்டரிக்கு வெளியே அனுப்ப வேண்டும் என்பதே என் எண்ணம். இவ்வாறு பலவற்றை பேசினார் ரோகித் சர்மா.

Advertisement