Rohith Sharma : பேட்டிங் சரியாக அமையவில்லை என்றாலும் எங்களின் இந்த செயலே வெற்றியை தந்தது – ரோஹித்

நேற்றைய போட்டியில் மும்பை அணியும், சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

Bhuvi

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்டினை இழந்துவந்தது. மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மத்தபடி யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

அதை தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை. மும்பை அணியின் அறிமுக வீரரான அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Alzarri Joseph

போட்டி முடிந்த பிறகு வெற்றிக்குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : இந்த வெற்றி சிறப்பான விடயத்தை தந்தது. நாங்கள் அடித்த ரன்கள் வெற்றி இலக்கிற்கு போதுமானது இல்லை. இந்த மைதானத்தில் 160-170 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அவ்வளவு ரன்கள் அடிக்கவில்லை. மேலும், எங்கள் அணியில் பொல்லார்ட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி முக்கியமான இன்னிங்க்ஸை மும்பை அணிக்காக தந்தார்.

Alzarri

பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், பந்துவீச்சின்போது சரியான இடத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் பந்தினை வீசினர். அதனால் எதிர் அணிக்கு அழுத்தத்தை தரமுடிந்தது. அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசினார். அறிமுக போட்டியிலே அவரது நம்பிக்கையான பந்துவீச்சு அவரின் திறமையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. மொத்தத்தில் இந்த வெற்றி எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி என்று ரோஹித் சர்மா கூறினார்.

Advertisement