ஒரு தொடரை வைத்து அவரின் திறமையை முடிவு பண்ணக்கூடாது – இளம்வீரருக்கு ஆதரவு தெரிவித்த ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒரு கட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தலா இரு போட்டிகளில் வென்று கடைசி போட்டி இவ்விரு அணிகளுக்கும் டிசைடர் போட்டியாக அமைந்தது. 5வது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓபனிங் ஆட வந்தனர். கேஎல் ராகுலை வெளியே உட்கார வைத்துவிட்டு விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் ஆட வந்தார். முதல் 9 ஓவர்களுக்கு இருவரும் ஜோடி சேர்ந்து 94 ரன்கள் எடுத்தனர்.

Rohith-1

- Advertisement -

இந்த அபாரமான தொடக்கம் இந்திய அணி 200 ரன்களை கடக்க பெரும் உதவியாக இருந்தது.எனவே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் உலக கோப்பை டி20 தொடர்களும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ஓபனிங் விளையாட வேண்டும் என்று ஒருபக்கம் பேசி வருகின்றனர். மறுபக்கம் கேஎல் ராகுல் உலக கோப்பை டி20 தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கே எல் ராகுல் வெகுநாட்களாக எந்தவித கிரிக்கெட் விளையாட வில்லை கடைசியாக அவர் ஆடியது ஆஸ்திரேலியா டி20 தொடர். அதன் பின்னர் எந்தவித உள்ளூர் தொடர்களிலும் அவர் ஆடவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே அவருக்கு டச் விட்டுப் போயிருக்கலாம்.இதுவே நடந்து முடிந்த டி20 தொடரில் அவர் சரியாக ஆடாடதற்கு காரணமாக இருக்கலாம்.

rahul

மேலும் கேஎல் ராகுல் ஒரு தலைசிறந்த டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஒரு தொடரை வைத்து முடிவு செய்ய முடியாது.எனவே இந்த ஒரு தொடரை மட்டும் வைத்துக்கொண்டு உலக கோப்பை தொடரில் அவர் வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி எழுப்புவதை முதலில் நிப்பாட்ட வேண்டும்.

Rahul

இன்னும் நிறைய காலம் இருக்கிறது அவர் நிச்சயம் தனது திறமையை திரும்ப காண்பிப்பார் என்றும் கூடிய சீக்கிரத்தில் அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement