டி20 உ.கோ தொடரில் அஷ்வின் விளையாட வேண்டும் என்று அவரோட – பெயரை சொன்னதே இவர்தானாம்

ashwin
- Advertisement -

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணியில் தமிழக வீரரான அஷ்வின் கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடிய அஷ்வின் அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

ashwin-2

- Advertisement -

அவருடன் சேர்த்து தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாகர், அக்சர் படேல், ஜடேஜா ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் அஷ்வினின் தேர்வு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறுகையில் : ஐக்கிய அரபு அமீரகத்தில் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக மைதானங்கள் இருக்கும்.

அதனால் சுழற்பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும் இந்த மைதானங்களில் அஷ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்பதாலும், ஐபிஎல் தொடர்களில் அவரது சிறப்பான பந்து வீச்சின் காரணமாகவும் அவரை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அஷ்வினை அணியில் தேர்வு செய்ய முக்கிய காரணமாக பின்புறத்திலிருந்து ஒரு வீரர் கொடுத்த ஆதரவே அஷ்வினுக்கு இடம் கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.

Ashwin

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்யும்போது கேப்டன் மற்றும் துணை கேப்டன் ஆகியோரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துள்ளனர். அதில் துணை கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் அஷ்வினின் பந்துவீச்சை அடித்து விளையாடுவது கடினமாக இருந்தது என்றும் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும் கூறியுள்ளார். எனவே உலக கோப்பை தொடரில் அவர் ஆட வேண்டும் என்று ரோஹித் தனது விருப்பத்தை கூறி இருக்கிறார்.

ashwin 1

அதனை ஒப்புக் கொண்ட விராட் கோலியும் தேர்வு குழுவினரிடம் அஷ்வினை சேர்க்கும்படி வேண்டுகோள் வைக்க அஷ்வின் அணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அஷ்வினின் இந்த வருகைக்கு ரோகித் சர்மா காரணமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் ரோஹித்தின் இந்த செயலை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement