ஒன்றாகவே கரியரை ஆரம்பித்தோம். ஆனா இப்போ மட்டும் என்ன அவசரம் – ரெய்னா ஓய்வு குறித்து உருகிய இந்திய வீரர்

raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு 19:29 மணியளவில் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஓராண்டாக ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருந்த அவரது ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்து தோனி அறிவிக்க ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையாக அமைந்தது.

Raina

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த அடியாக தோனி ஓய்வு பெற்ற சிலமணி நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தான் பதிவிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் : உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எப்போதும் உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது.

முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன். உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவிற்காக விளையாடுவதில் பெருமை. நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டு உள்ளார். “தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி” என்ற கூற்றிற்கு ஏற்ப தோனி ஓய்வு அறிவித்தவுடன் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.

Raina

ரெய்னாவிற்கு தற்போது 33 வயதாகிறது மேலும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருந்தும் அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ரெய்னாவின் இந்த ஓய்வு முடிவு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால் இது தான் சரியான தருணம் என உணர்ந்ததால் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் சகோதரா. நாம் ஒன்றாக இந்திய அணியில் நுழைந்தது இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்று உருக்கத்துடன் ரெய்னாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement