இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக லண்டனிலிருந்து வெள்ளிக்கிழமை அன்று இந்திய வீரர்கள் பஸ் மார்க்கமாக லீட்ஸ் மைதானத்திற்கு பயணம் மேற்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களின் குடும்பத்தினர் என அனைவரும் மகிழ்ச்சியாக பயணித்துள்ளனர். இந்த பஸ் பயணத்தின் போது நடைபெற்ற சுவாரஸ்யமான சில சம்பவங்களை வீரர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தனர்.
அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் யாதெனில் இந்திய அணியின் துவக்க வீரரருக்கான மாற்று வீரராக வந்துள்ள பிரித்வி ஷா மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஆகியோர் பஸ்ஸில் தூங்கும் புகைப்படம் தான்.


அந்த தருணங்களை புகைப்படமாக எடுத்த ரோகித் சர்மா அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தூங்குவது தான் வாழ்க்கை” என்று கேப்ஷன் இட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



