ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை அடுத்து ரசிகர்களுக்கு உறுதி அளித்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohith

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு சர்வதேச போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய வீரரான ரோகித் சர்மாவிற்கு இந்த விருது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து தமிழக வீரரான மாரியப்பனுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Rohith

இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை இந்திய ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் ரோகித் பேசியதாவது : வணக்கம் தோழர்களே. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

இது ஒரு அற்புதமான பயணம் நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரருக்கு கொடுக்கப்படும் இந்த விருதை நான் பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம். அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் உங்களது ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.

இந்தியாவுக்காக நான் மேலும் பல வெற்றிகளை தேடித் தருவேன். மற்றும் மேலும் பெருமைகளை தருவேன் என்றும் உறுதியளிக்கிறேன். நாம் எல்லோரும் சமூக விலைகளை கடைப்பிடித்து வருவதால் உங்கள் அனைவரையும் (வெர்சுவல்) கற்பனையாக ஹக் செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரோகித் மேலும் அடுத்த சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.