ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோஹித். அவருக்கு பதிலாக விளையாடுறது இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Rohith-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை 5 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. அதற்கடுத்த இரண்டாவது போட்டி 8 ஆம் தேதி ஆக்லாந்திலும், மூன்றாம் போட்டி 11ம் தேதி மவுன்ட் மாங்கனியிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிலிருந்து துவக்க வீரர் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஐந்தாவது டி20 போட்டியின் போது ரோகித் சர்மா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இந்நிலையில் அந்த காயம் குணமடையாத காரணத்தினால் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள பதிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து துவக்க வீரர் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக அகர்வால் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி டி20 போட்டியில் ரோஹித் சிறப்பாக பேட்டிங் செய்து 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் காயம் ஏற்பட்டடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement