தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா இடம்பெறாததற்கு இதுதான் காரணம் – வெளியான தகவல்

Rohith
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை படுமோசமாக இழந்ததன் காரணமாக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.

Rohith

- Advertisement -

வரும் 12 ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆறு மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த ஹர்டிக் பண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த புதிய அணியினை சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக்குழு தேர்வு செய்தது. இந்த இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பிரித்வி ஷா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Rohith-4

இந்நிலையில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் ஏன் ரோகித்சர்மா அணியில் இடம் பிடிக்கவில்லை என்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அதற்கான பதில் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

ரோகித் இல்லாததால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஓபனிங்கில் மிகவும் பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா தொடர்பிலும் அவர் இடம்பெறாதது குறித்து வெளியான தகவலின்படி நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ரோகித் சர்மா தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அந்த காயத்தின் தீவிரம் இன்னும் இருப்பதால் அவர் குணமடைய இன்னும் சில வாரங்கள் தேவைப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

rohith 6

மேலும் 29ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்க உள்ளதால் அதற்குள் அவர் இந்த காயத்திலிருந்து முற்றிலும் தயாராகி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பங்கேற்பார் என்று அதிகாரப்பூரவமற்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement