ரோஹித்தின் காயம் என்ன நிலையில் இருக்கிறது தெரியுமா ? அடுத்த தொடர்களில் அவரது நிலைமை இதுதான் – விவரம் இதோ

Rohith-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Thakur 3

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட ரோஹித் 60 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். அதன்பிறகு அவர் இரண்டாவது இன்னிங்சில் பீல்டிங் செய்ய வரவில்லை. மேலும் அவருடைய காயம் தசைப்பிடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அது இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் வீரர் ராகுல் கூறுகையில் : ரோகித் சர்மா அவருக்கு ஏற்பட்ட காயம் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டது. மேலும் அவருடைய காயம் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்குள் சரியாகிவிடும் என்றும் அவர் மீண்டும் பழையபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ராகுல் தெரிவித்தார்.

rohith 6

அணி நிர்வாகத்தின் பார்வையிலும் ரோகித் சர்மாவின் இந்த காயம் சுளுக்கு சாதாரணமாக கால் பகுதியில் ஏற்பட்டள்ளதாகவும், மேலும் எந்தவித பிரச்சனையும் இன்றி ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இந்திய அணி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement