வீடியோ : ரோஹித் சர்மா கிட்ட இருந்து இப்படி ஒரு சிக்ஸரா ? வியப்பில் ரசிகர்கள் – என்னா ஷாட்

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மூன்றாம் நாளில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 2-வது இன்னிங்சின் போது அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Rohith

- Advertisement -

இந்த இரண்டாவது இன்னிங்சில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் சிறிது நேரம் களத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மாவின் ஷாட் செலக்ஷன் அற்புதமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்சின் 15.3 ஆவது ஓவரின்போது ராபின்சன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த அப்பர் கட் சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷார்ட் பிட்ச் பந்தை ரோகித் சர்மா புல் ஷாட் மூலம் சிக்ஸருக்கு விளாசியதை நாம் பலநூறு முறை கண்டிருப்போம். ஆனால் ரோஹித் சர்மாவிடம் இருந்து இதே போன்று அப்பர் கட் ஷாட்டை நாம் இதுவரை பார்த்தது கிடையாது. அந்த வகையில் ஷார்ட் பிட்ச் பந்தை ரோகித் சர்மாவை சிக்சர் அடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். தற்போது இணையத்தில் வீடியோவாகவும் இது வைரலாகி வருகிறது.

முதல் இன்னிங்சின் போது 78 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி ஆனது தற்போது இரண்டாவது இன்னிங்சில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 139 ரன்கள் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement