பீஃப், சிக்கன் மட்டும் சாப்படல அதோட சேத்து இந்த இறைச்சியையும் ரோஹித் சாப்ட்டு இருக்காரு – வைரலாகும் புகைப்படம்

Rohith

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வைக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IND

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி மற்றும் ப்ரீத்தி ஷா ஆகியோர் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி புத்தாண்டு அன்று மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதிக்கு சென்று உணவு உட்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கடந்த இரு தினங்களாக இதுகுறித்த செய்திகளே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் பயோ பபுள் கட்டுப்பாடுகளை மீறி உணவகத்திற்கு சென்று உணவு உட்கொண்டதால் இதன் காரணமாக இந்த ஐந்து வீரர்களையும் தற்போது அணி நிர்வாகம் தனிமைப்படுத்தப்பட்டும் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் உண்மையில் அவர்கள் 5 பேரும் அங்கு என்னென்ன சாப்பிட்டார்கள் என்பது குறித்த புகைப்படங்களும் செய்திகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களான இவர்கள் அனைவரும் சாப்பிட்ட பில்லை ஜூம் செய்து ரசிகர்கள் அதை பட்டியலிட்டு உள்ளனர். அதில் சிக்கன், பீப் மற்றும் இறால் வகையான உணவுகளோடு சேர்த்து பன்றி இறைச்சியும் ரோகித் சாப்பிட்டு உட்கொண்டதாக தெரிகிறது. இதற்குண்டான பில் புகைப்படத்தையும் தெளிவாக ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து உறுதிசெய்துள்ளனர்.

- Advertisement -

ஒருபக்கம் ரோகித் இருக்கு எதிராக எதிர் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஒருபுறம் அவருக்கு ஆதரவாக குரல்களும் எழுந்து வருகின்றன. மேலும் அனைத்து இறைச்சிகளையும் உட்கொண்டவர்கள் பன்றிஇறைச்சியும் சாப்பிட்டது சர்ச்சைக்கு உள்ளானது மேலும். அவர்கள் பயோ பபுள் விதிமுறையை மீறி ரசிகரை சந்தித்ததால் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.