நாளை புதிய மெகா சாதனை படைக்கவுள்ள ஹிட்மேன் ரோஹித் சர்மா – சாதனை விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி 1- 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

அதன்படி அந்த மெகா சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணி வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை தற்போது ரோகித் சர்மா படைக்க உள்ளார். இன்னும் 29 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா 5 சிக்சர்களை அடித்து விட்டால் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார்.

Rohith

மேலும் ரோஹித் சர்மா தற்போது இருக்கும் பார்முக்கு அவர் நாளைய போட்டியிலே கூட 5 சிக்ஸர்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக இந்த சாதனையை படைப்பார் என்று உறுதியாக கூறலாம்.

Advertisement