நீல நிறத்தில் தவற விட்டுட்டேன். ஆனா மஞ்சள் நிறத்துல கண்டிப்பா சந்திப்போம் – தோனி குறித்து நெகிழ்ந்த பிரபலம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரராக திகழ்ந்த தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 16 ஆண்டுகளாக விளையாடி 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

7

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பினால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், சக அணி வீரர்கள் என அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தீவிர ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா தோனியின் ஓய்வு குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து ரோகித் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர் தோனி.

நீல நிறத்தில் நாம் அவரை கண்டிப்பாக மிஸ் செய்வோம் ஆனால் மஞ்சள் நிறத்தில் நம்முடன் தான் இருப்பார். 19ஆம் தேதி டாசில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

CskvsMi

மேலும் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.