3ஆவது டி20 போட்டி : ரோஹித் சர்மா வருகையால் அணியில் இருந்து வெளியேறும் வீரர் இவர்தான் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

indvseng

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி இன்று (மார்ச் 16) இரவு துவங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இரண்டாவது அலையாக தொடங்கி வருவதால் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளதால் ரசிகர்களின் ஆரவாரம் இன்றி இந்த போட்டி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று கோலி அறிவித்திருந்தால் இன்றைய மூன்றாவது போட்டியில் ரோகித் அணிக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ரோஹித்தின் வருகையால் யார் துவக்க வீரர்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

அதன்படி முதல் போட்டியில் சரியாக விளையாடாத தவானை நீக்கிவிட்டு இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி அறிமுக துவக்க வீரராக விளையாடிய இஷான் கிஷன் தனது முதல் போட்டியிலேயே 5 பவுண்டரி 4 சிக்சர்கள் என அமர்க்களப்படுத்தி அரைசதம் அடித்ததால் அவர் மூன்றாவது போட்டியிலும் நீடிப்பார் என்று தோன்றுகிறது. அதே வேளையில் முதல் போட்டியில் ஒரு ரன்னும், இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாகிய கேஎல் ராகுல் இன்றைய போட்டியில் துவக்க வீரருக்கான இடத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

Rahul

அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களம் காண்பார். ஏனெனில் வலதுகை இடதுகை ஓப்பனிங் ஜோடியை எப்போதும் இந்திய அணி நம்பும் என்பதால் கேஎல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வலதுகை ஆட்டக்காரர் ரோஹித் மற்றும் இடது கை ஆட்டக்காரரான கிஷன் கிஷன் இன்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.