இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடத் தொடங்கினார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ரோகித் சர்மா அடுத்தடுத்து சதங்களை அடித்து விளாசினார். மேலும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இரண்டாவது போட்டியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
மேலும் மூன்றாவது போட்டியின் போது அனைவரும் பேட்டிங் செய்ய தடுமாறிய இந்த மைதானத்தில் கூட முதல் இன்னிங்சில் 66 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது முன்னேறி உள்ளார்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி முடிந்து வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ரோகித்சர்மா பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
Rank Player Country Rating Points
1 Kane Williamson New Zealand 919
2 Steve Smith Australia 891
3 Marnus Labuschagne Australia 878
4 Joe Root England 853
5 Virat Kohli India 836
6 Babar Azam Pakistan 760
7 Henry Nicholls New Zealand 747
8 Rohit Sharma India 742
9 David Warner Australia 724
10 Cheteshwar Pujara India 708
46 Zak Crawley England 537
அதனைத்தொடர்ந்து லாபுஷேன் 878 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், விராட் கோலி மேலும் சில இடங்கள் சரிந்து 836 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா தற்போது டாப் 10க்குள் வந்துள்ளார், அவரது அதிகபட்ச இடமான எட்டாவது இடத்தை தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டியுள்ளார்.
742 புள்ளிகளுடன் அவர் வார்னரை பின்தள்ளி 8 ஆம் இடத்திற்கு இடத்திற்கு சென்றுள்ளார். இதே பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் புஜாரா பத்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா எதிரணியை தனது பேட்டிங்கால் மிரட்டுவதில் வல்லவர். அந்த வகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிரடி அவர் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.