இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல கோடிகள் இதுவரை நிவாரண நிதியாக இந்திய அரசாங்கம் செலவழித்து வருவதால் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை களைய ஒவ்வொரு மாநில அரசும் மக்களிடம் தானாக முன்வந்து நிதி உதவி வழங்கலாம் என்று கோரிக்கை வைத்தது.

மேலும் பிரதம மந்திரி மோடி அவர்களின் நிவாரண வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்சம் (முதல்வர் நிவாரண நிதி 21, பிரதமர் நிவாரண நிதி 31) அளித்து பிரதமர் மற்றும் ரசிகர்களின் பாராட்டினை பெற்றார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம், கம்பீர் 50 லட்சம் என அவர் அவர்கள் தங்களது அளவிற்கு ஏற்ப பணத்தினை நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானே 10 லட்ச ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா தம்பதி 3 கோடி வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் துணைக்கேப்டனான ரோஹித் சர்மா மொத்தம் 80 லட்சம் வழங்கியுள்ளார். அதில் 45 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு, மகாராஷ்டிர அரசுக்கு 25 லட்சமும், பீடிங் இந்தியா மற்றும் தெருநாய்கள் நல்வாழ்வு அமைப்புக்கு தலா 5 லட்சம் என மொத்தம் 80 லட்சம் கொடுத்துள்ளார்.
We need our country back on feet & the onus is on us. I’ve done my bit to donate 45lakhs to #PMCaresFunds, 25lakhs to #CMReliefFund Maharashtra, 5lakhs to @FeedingIndia and 5lakhs to #WelfareOfStrayDogs.Let’s get behind our leaders and support them @narendramodi @CMOMaharashtra
— Rohit Sharma (@ImRo45) March 31, 2020
இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான பின்னர் ரசிகர்கள் ரோஹித்தை புகழ்ந்து இதுலயும் ஹிட்மேன் அதிரடியான பங்களிப்பை செய்துள்ளார் என்று பாராட்டி வருகின்றனர்.



