மூன்றாவது டெஸ்டில் ரோஹித் ஷர்மா எந்த இடத்தில் விளையாடுவார் ? விளையாடுவாரா ? – அணிக்குள் ஏற்பட்ட குழப்பம்

Rohith

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தால் பரிதாப தோல்வி அடைந்தது. இதன் பிறகு தற்போது நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று சமன் செய்துள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 7ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் இடம் பெறுகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்ட ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சென்றடடைந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 3வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

தற்போது ரோகித் சர்மா வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாடப் போகிறார் ? என்று பல கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவாரா ? இல்லையென்றால் ஐந்தாவது வரிசையில் களமிறங்குவாரா ? என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.கடந்த இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக செயல்பட்ட மயங்க் அகர்வால் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ஒரு பக்கம் பேசப்படுகிறது.

Rohith

அதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய ஹனுமா விகாரியும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்பதால் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் தான் களமிறங்குவார் என்று மற்றொரு பக்கம் பேசப்படுகிறது. இதுகுறித்து தெளிவான முடிவை இந்திய அணி நிர்வாகம் தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஹோட்டல் ஒன்றிற்கு கொரோனா விதிமுறைகளை மீறி பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறியதாக ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அணி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த 5 வீரர்களும் அடுத்த போட்டியில் விளையாடுவார்களா ? என்ற குழப்பம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.