இந்தியாவை மதிக்காத ஒரே நாட்டு ரசிகர்கள் இவர்கள்தான் – ரோஹித் சர்மா ஆதங்கம்

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகம் முழுவதும் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அங்கு எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும் .எப்போதும் இந்திய அணியை வரவேற்கவும் உற்சாகமாக கொண்டாடுவதற்கும் பல ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என எந்த மைதானத்திற்கு சென்றாலும் அந்த உள்நாட்டு அணியை விட இந்திய அணிக்கு ஆதரவு அதிகம் கிடைக்கும்.

Ban 3

- Advertisement -

ஆனால் சமீபத்தில் ஒரு நாட்டில் மட்டும் இந்திய அணிக்கே பெரிதாக ஆதரவு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பேசியதாவது : இந்திய அணி எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டு ரசிகர்களும் நமக்கு ஆதரவு அளிப்பார்கள்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அந்த நட்டு அணியை விட அதிக ஆதரவு நமக்கு கிடைத்த நேரங்கள் எல்லாம் உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் மட்டும் நமக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. வங்கதேசத்தில் உணர்ச்சிமிக்க ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். வங்கதேச அணி கடந்த சில வருடங்களாக தீவிரமாக கிரிக்கெட் விளையாடி வருகிறது.

ban 1

2019 உலக கோப்பை தொடரில் நாம் அதை பார்த்து இருப்போம் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதிய போது சர்ச்சைக்குரிய ஒரு பந்தில் ரோகித் சர்மாவிற்கு நோபால் கொடுக்கப்பட்டது. தற்போது வரை இந்த விஷயத்தை வைத்து வங்கதேச ரசிகர்கள் சிறுபிள்ளைத்தனமாக சண்டையிட்டுக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement