குழந்தை பாதுகாப்பு விடயத்தில் இப்படியா நடந்துகொள்வது – ரோஹித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Rohith
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் மெல்ல மெல்ல எழதுவங்கியுள்ளன.

விமான டிக்கெட் தாமதம் காரணமாக இந்திய அணி இன்னும் நாடு திரும்பாதது குறிப்பிடத்தக்கது. 15 அல்லது 16 ஆம் தேதி இந்திய அணி நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளி இரவு இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியா (மும்பை) திரும்பியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை விமான நிலையத்திற்கு வந்த பொழுது கார் ஒன்றில் ஏறி சென்றது தற்போது சரியான விடயமாக மாறியுள்ளது. அது யாதெனில் காரில் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து ரோகித் சர்மா சீட் பெல்ட் அணிந்தார். ஆனால் அவரது மனைவி காரின் இடது புறம் சீட்டில் அமர்ந்த போது சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் குழந்தைக்காக எந்த பாதுகாப்பும் இல்லை.

குழந்தையை மடியில் வைத்தபடி ரோகித் சர்மாவின் மனைவி அமர்ந்து சென்றார். மேலும், ரோஹித் சர்மாவின் மனைவி சீட்பெல்ட் அணியவில்லை உடனே ரோஹித் புறப்பட்டார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய வீரராக இருந்தும் இவ்வளவு வசதி இருந்தும் குழந்தைகளை ஒரு தனி சீட்டு கொண்ட பாதுகாப்பான காரை பயன்படுத்தலாமே ஏன் குழந்தையை மடியில் வைத்து இப்படி ஆபத்தாக பயணிக்க வேண்டும் என்று கமெண்ட்டுகள் மூலம் ரோகித் சர்மாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அந்த இடத்தில் கூட்டம் கூடிவிடும் என்று நினைத்து அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பி இருக்கலாம். மேலும் அவருக்கு என்ன நேரத்தில் தோன்றி இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் அதுபோன்ற சூழலில் ரோஹித் சர்மாவை குறை கூறுவது தவறு என்பது எங்கள் கருத்து.

Advertisement