இவர் இல்லாமல் என் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை – உருகிய ரோஹித் சர்மா

Rohith

இந்திய அணியின் துணை கேப்டனும், அதிரடி துவக்க வீரருமான ரோகித்சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு முதல் உச்ச கட்ட பார்மில் இருக்கும் ரோகித் சர்மா ரன்களை அடித்து நொறுக்கி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது நான்காவது திருமண நாளை கொண்டாடினார்.

Ritika

கடந்த 2015ஆம் ஆண்டு தனது காதலியும், ஸ்போர்ட்ஸ் மேனேஜருமான ரித்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த வருடம் ஆஸ்திரேலிய தொடரின் போது இந்த தம்பதிக்கு சமைரா என்ற அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நேற்று தனது திருமண நாளை கொண்டாடிய ரோகித் சர்மா அவரது திருமணத்தின் போது மனைவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சில குறிப்புகளையும் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : நீ இல்லாமல் என்னுடைய வாழ்க்கை நகர்வது என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதைவிட சிறப்பான ஒன்று எதுவுமே கிடையாது ஐ லவ் யூ ரித்திகா என்று அந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். ரோகித் சர்மாவின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களால் அதிக அளவு லைக் செய்யப்பட்டும், ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. மேலும் அனைத்து தரப்பில் இருந்தும் ரோஹித் சர்மாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Can’t imagine my life moving forward without you. Nothing can be better than this. I love you @ritssajdeh 😘😍

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தனது குடும்பத்தினரின் முன்னிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ஆவது சிக்சர் அடித்து அசத்தினார். இந்த போட்டி முடிந்ததும் அவர் அவர் குழந்தையுடன் விளையாடிய வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -