இவரின் தலைமையில் ஆடியபோதுதான் என் கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரும், துணை கேப்டனுமான ரோகித்சர்மா கடந்த 4 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் மூன்று முறை இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பிறகு கோலிக்கு பதிலாக ரோஹித்தை எதாவது ஒருவடிவ கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்று பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

rohith

அந்த வகையில் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை மைதானத்தில் தான் விளையாட முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரோஹித் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட ஆரம்பித்த தருணம் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

மேலும் அதற்கு முன்னதாக 2013இல் ரிக்கி பாண்டிங் தலைமையில் விளையாடிய காலம் தான் தான் செலவழித்த காலங்களில் மேஜிக் போன்று இருந்த காலமாக ரோகித் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அந்த சீசனில் தான் ரோகித் வேற லெவல் ஃபார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மும்பை அணிக்கு கேப்டனாக மாறிய ரோஹித் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் அசத்தினார்.

Ponting

அதன்பிறகு இந்திய அணிக்கு துவக்க வீரராக மாறிய அவர் அதிரடியில் பின்னி எடுத்தார் அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து ரோஹித் இன்று ஒருநாள் கிரிக்கெட் மற்றுமின்றி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பெருமளவு சாதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement