சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து தனித்துவமான சாதனை படைத்த ரோஹித் – விவரம் இதோ

Sachin
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தாலும் 2013ஆம் ஆண்டிலிருந்து தான் சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். கேப்டனாக தோனி இருந்தபோது மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோஹித்தை துவக்க வீரராக களமிறக்கிவிட்டார். அதன்பிறகு தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் எண்ணிலடங்கா பல சாதனைகளை ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்ந்துவிட்டார்.

Rohith

அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என இதுவரை தனது அசாத்தியமான அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை மகிழ வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்படி அதிரடியாக விளையாடி வரும் போது டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

ஆனாலும் விடாமுயற்சிக்கு பிறகு தற்போது 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியிலும் அவர் துவக்க வீரராக விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ரோஹித் தற்போது முதன்மை துவக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் செயல்பட்டு வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவரது ஆட்டம் ஓரளவு சிறப்பாகவே உள்ளது.

Rohith-2

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா துவக்க வீரராக ஒரு மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய அணி சார்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 11000 ரன்களை எடுத்த துவக்கவீரர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

rohith 1

சச்சின் டெண்டுல்கர் 241 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை குவித்து இருந்தார். ரோகித் சர்மா தற்போது 245 ஆவது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். துவக்க வீரராக அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக சனத் ஜெயசூரியா 19,298 ரன்கள் உடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement