இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. 4ஆம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க மணி 431 ரன்களுக்கு ஆட்டமிழக்க தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் அடித்து 312 ரன்கள் முன்னிலையில் இந்தியா அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
????????????????Rohit Sharma on the mic ???? #INDvSA pic.twitter.com/HC5q3Wh30p
— Ashwin Kumar (@ashwin_kumarV) October 5, 2019
மேலும் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் புஜாரா சிறப்பாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அப்போது ரோஹித் ஒரு பந்தை அடித்து ஒரு ரன்னுக்கு புஜாராவை அழைக்க புஜாரா ஓடி வரவில்லை எனவே புஜாராவை ஹிந்தியில் அசிங்கமாக திட்டினார் ரோகித்சர்மா. அவர் திட்டிய வார்த்தை மைக்கில் தெளிவாக பதிவாகியது அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.