ரோஹித்திடம் திட்டுவாங்கி அசிங்கப்பட்ட பண்ட். இதுக்கு தான் தோனி வேணும்னு சொல்றோம் – விவரம் இதோ

Pant-1

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

ban 1

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களும், பண்ட் 27 ரன்கள் குவித்தனர். மேலும் இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விட்டது. குறிப்பாக முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களில் இருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவும் ரிவியூ கேட்கவில்லை ஆனால் ரீப்ளேவில் அது அவுட் என தெரியவந்தது. இதனை கீப்பர் ஆன ரிஷப் பண்ட் தான் சரியாக கணித்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் பண்ட் அதனை சரியாக கணிக்கவில்லை.

Pant 2

அதேபோல சவுமியா சர்க்கார் ஆடும்போது பந்து பேட்டில் பட்டதாக நினைத்து ரிஷப் ரோகித் இடம் ரிவ்யூ கேட்கச் சொன்னார். ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை மேலும் இது அவுட் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் கடுப்பான ரோகித் என்னையா இப்படி பண்ணிட்ட என்பதுபோல பண்ட்டை பார்த்து ஒரு ரியாக்ஷன் கொடுத்தார்.

- Advertisement -

Pant 3

இதனை குறிப்பிட்டு இணையத்தில் ரசிகர்கள் பண்டை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் இதற்குத்தான் சொல்வது தோனி தேவை என்பது இப்போது உணர்கிறீர்களா ? தோனி இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானவர் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரோகித் சர்மா தொடர்ந்து பண்ட் செய்த இந்த தவறுகளுக்காக தொடர்ந்து அவரைப்பார்த்து வசை பாடிய வண்ணம் மைதானத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது.